என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சீனாவில் பெண் வீட்டு சிறை
நீங்கள் தேடியது "சீனாவில் பெண் வீட்டு சிறை"
நோபல் பரிசு பெற்ற சமூக ஆர்வலரின் மனைவியை வீட்டுச் சிறையில் இருந்து உடனடியாக விடுதலை செய்யுமாறு சீன அரசை ஐ.நா. மனித உரிமை முகமை வலியுறுத்தியுள்ளது. #UNseekurgentrelease #LiuXiaobo #LiuXia
ஜெனிவா:
சீனாவில் ஜனநாயகம் தொடர்பான ‘சார்ட்டெர் 8’ என்ற நூலை கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியிட்ட காரணத்துக்காக அந்நாட்டின் பிரபல எழுத்தாளரான லியு சியாபோ (61), என்பவருக்கு சீன அரசு 11 வருட சிறைத் தண்டனை விதித்தது.
கடந்த 2010-ம் ஆண்டு அவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதனால் சீனாவுக்கும் நோபல் பரிசை அளித்துவரும் நார்வே நாட்டுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு சமீபத்தில்தான் சீரடைந்தது.
இதற்கிடையே, ஈரல் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் லியு சியாபோ பரோலில் விடுவிக்கப்பட்டார். ஆனால், வெளிநாட்டில் இருந்து சிறப்பு நிபுணர்களை வரவழைத்து அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சீன அரசு நிராகரித்து விட்டது.
ஷென்யாங் நகரிலுள்ள சீன மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனையில் ஈரல் புற்றுநோய் முற்றிய கட்டத்தில் கடந்த மே மாதம் அனுமதிக்கப்பட்டிருந்த லியு சியாபோவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது ஈரலில் இருந்த புற்றுக்கட்டி உடைந்து இரத்தக்கசிவு ஏற்பட்டதால் லியு சியாபோ கவலைக்கிடமான நிலையில் இருந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லியு சியாபோ, 13-7-2017 அன்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது மரணத்துக்கு உலக நாடுகளில் உள்ள முக்கிய தலைவர்களில் பலர் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
அவரது மரணத்துக்கு பின்னர் லியு சியாபோவின் மனைவி லியு கிசியா-வை சீன அரசு வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. அவரது கைபேசி அழைப்புகள் ஒட்டு கேட்கப்படுவதாகவும், சந்திக்க விரும்பும் நபர்களை போலீசார் கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதனால், லியு கிசியா மிகுந்த மன உளைச்சலுக்கு இலக்காகி, உடல்நிலை பாதிக்கப்பட்டு வேதனைப்பட்டு வருவதாகவும் சில சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தனிமையான இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதால் மன அழுத்தத்துடன் சேர்த்து உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ள லியு கிசியாவை வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெறும் வகையில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை குழு நிபுணர்கள் சீன அரசை இன்று வலியுறுத்தியுள்ளனர். #UNseekurgentrelease #LiuXiaobo #LiuXia
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X